டிரெண்டிங்
காஞ்சிபுரம்: நடனமாடியபடி வாக்கு சேகரித்த சட்டமன்ற உறுப்பினர் - களைகட்டிய பிரசாரம்
காஞ்சிபுரம்: நடனமாடியபடி வாக்கு சேகரித்த சட்டமன்ற உறுப்பினர் - களைகட்டிய பிரசாரம்
காஞ்சிபுரத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் நடனமாடியபடி சென்று வாக்கு சேகரித்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 9ஆவது வார்டு பகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் மகாலட்சுமி யுவராஜ், கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு ஆதரவு திரட்ட வந்த காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், இளைஞர்களுடன் இணைந்து நடனமாடியபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.