சூட்கேஸ் அரசியலுக்குப் பின் மக்கள் நீதி மய்யம் ஒருபோதும் செல்லாது - கமல்ஹாசன்

சூட்கேஸ் அரசியலுக்குப் பின் மக்கள் நீதி மய்யம் ஒருபோதும் செல்லாது - கமல்ஹாசன்

சூட்கேஸ் அரசியலுக்குப் பின் மக்கள் நீதி மய்யம் ஒருபோதும் செல்லாது - கமல்ஹாசன்
Published on

சூட்கேஸ் அரசியலுக்குப் பின் மக்கள் நீதி மய்யம் ஒருபோதும் செல்லாது என அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் நடைபெற்றது. கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் குறித்த பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்ட இந்தக் கூட்டத்தில், கமல்ஹாசனை முதலமைச்சராக்க பணியாற்றுவது, கூட்டணி குறித்த முடிவுகளை எடுக்க முழு அதிகாரம் வழங்குவது உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

உறுப்பினர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசும்போது, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து சாடியிருக்கிறார். மேலும், “அந்த இரண்டு ஊழல் கட்சிகளோடும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. சூட்கேஸ், ஸ்வீட்பாக்ஸ் அரசியலுக்குப் பின் மக்கள் நீதி மய்யம் ஒருபோதும் செல்லாது. தன்னம்பிக்கையோடு இருப்பவர்கள் மட்டுமே என்னுடன் இருக்கலாம். பணம் சம்பாதிக்கும் நோக்கில் இங்கு இருப்பவர்கள் வெளியேறுவதற்கான கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன.

மக்கள் நீதி மய்யத்தில் வாரிசு அரசியலுக்கு வாய்ப்பளிக்க கூடாது. அதன் காரணமாகவே விருப்பம் தெரிவித்தாலும் ஸ்ருதிஹாசன், அக்‌ஷராஹாசன் ஆகியோரை பொதுக்குழு கூட்டத்திற்கு அழைத்து வரவில்லை. தீர்மானத்தில் குறிப்பிட்டிருப்பதுபோல், மக்கள் நல அமைப்புகள், சுற்று சூழல் இயக்கங்கள் தங்களுடன் பணியாற்றலாம். தேர்தலை மக்கள் பலத்தோடு சந்திப்போம். மாணவர்கள் மற்றும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யத்தில் இணைக்கும் வகையில் தீவிரமாக பணியாற்ற வேண்டும்” என கட்சி நிர்வாகிகளை கமல்ஹாசன் கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com