டிரெண்டிங்
கமல்ஹாசனின் அடுத்த கட்ட சுற்றுப்பயண தேதி அறிவிப்பு
கமல்ஹாசனின் அடுத்த கட்ட சுற்றுப்பயண தேதி அறிவிப்பு
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் அடுத்த கட்ட சுற்றுப்பயணம் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கட்சி தொடங்கியது முதல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று மக்களுடன் கலந்துரையாடி வருகின்றார். இந்த நிலையில் கமல்ஹாசனின் அடுத்த கட்ட சுற்றுப்பயணம் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி அடுத்த மாதம் 8ம் தேதி திருப்பூரிலும், 9ம் தேதி நீலகிரியிலும், 10ம் தேதி கோவையிலும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 16ம் தேதி கன்னியாகுமரியிலும், 17ம் தேதி தூத்துகுடியிலும், 18ம் தேதி திருநெல்வேலி மற்றும் விருதுநகர் பகுதிகளிலும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

