“எங்கள் தொழில் அரசியல் இல்லை; எங்களுக்கு வேறு தொழில் இருக்கிறது” - வானதிக்கு கமல் பதிலடி

“எங்கள் தொழில் அரசியல் இல்லை; எங்களுக்கு வேறு தொழில் இருக்கிறது” - வானதிக்கு கமல் பதிலடி

“எங்கள் தொழில் அரசியல் இல்லை; எங்களுக்கு வேறு தொழில் இருக்கிறது” - வானதிக்கு கமல் பதிலடி
Published on

அரசியல் எங்களுக்கு தொழில் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளராக, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். அதேபோல் இதேதொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் போட்டியிடுகிறார். இதனால் இது நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இன்று கோவை ஓசூர் சாலையில் உள்ள மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில், தெற்கு தொகுதி தேர்தல் அலுவலர் சிவசுப்பிரமணியனிடம் வானதி சீனிவாசன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இத்தொகுதியில் அதிமுக முன்னரே வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை நான் இங்கு தோல்வி அடைந்து இருந்தாலும், மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு சேர்த்து இருக்கின்றேன்.

கோவை தெற்கு தொகுதியில் நிச்சயமாக 100 சதவீதம் பாஜக வெற்றி பெறும். சினிமா பிரபலங்கள் அத்தனை பேரும் அரசியலில் வெற்றி பெற்றதில்லை. திரைத்துறையில் இருந்து வந்தாலும் மக்கள் பணி செய்தவர்கள் மட்டுமே அரசியலில் வெற்றி பெற்று இருக்கின்றனர். தொலைக்காட்சியில் வந்து விட்டால் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். மே 2-ம் தேதிக்குப் பின்னர் 'பிக்பாஸ்' அல்லது புதிய படத்தில் நடிக்க கமல் போகப்போகிறார்” என்றார்.

இதுகுறித்து கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “டாக்டர் பணி செய்துகொண்டிருந்தவர் 2-ஆம் தேதிக்கு பிறகு டாக்டர் பணி செய்வார். ஒரு வக்கீல் அதன்பின்பு வக்கீல் பணி செய்வார். அதுபோலத்தான் நடிக்க செல்வதும். எங்களுக்கு வேறு தொழில் இருக்கிறது. அரசியல் எங்களுக்கு தொழில் இல்லை. அரசியல் எங்கள் கடமை. அதையும் செய்வோம். மற்றதையும் செய்வோம்” எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com