\
கோவை தெற்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பு: சிலம்பம் சுற்றி அசத்திய கமல்

கோவை தெற்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பு: சிலம்பம் சுற்றி அசத்திய கமல்

கோவை தெற்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பு: சிலம்பம் சுற்றி அசத்திய கமல்
Published on

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் நடைபயிற்சி மேற்கொண்டு, மக்களிடம் கலந்துரையாடினார்.

கமல்ஹாசன் நேற்று, வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இன்று பல்வேறு பகுதிகளில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். பந்தயசாலை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கமல்ஹாசன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களிடம் கலந்துரையாடினார்.

பின்னர் லாரிப்பேட்டையிலுள்ள மீன் மார்க்கெட் பகுதியில் உள்ளவர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 80அடி சாலையில், தேவர்பிலிம்ஸ் சாண்டோ சின்னப்பா தேவர் தொடங்கிய உடற்பயிற்சி கூடத்திற்கு சென்ற கமல்ஹாசன், அங்கு சிலம்பம் சுற்றினார். பின்னர் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை பார்வையிட்ட அவர், பேருந்தில் பயணம் செய்து மக்களுடன் கலந்துரையாடினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com