நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21ம் தேதி முதன்முறையாக தனது அரசியல் கொடியை ஏற்றுகிறார்.
தமிழக அரசியலில் களமிறங்கியுள்ள கமல்ஹாசன் மக்களின் பிரச்னைகளை அறிந்து கொள்வதற்காக பிப்ரவரி 21ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் கமல்ஹாசனின் பிப்ரவரி 21ம் தேதி சுற்றுப் பயணம் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
காலை 7.45: அப்துல் கலாம் இல்லத்திற்கு கமல்ஹாசன் செல்கிறார்
காலை 8.15: அப்துல் கலாம் பள்ளிக்கு கமல் வருகை புரிகிறார்
காலை 8.50: கணேஷ் மகாலில் மீனவர்களை சந்திக்கிறார் கமல்ஹாசன்
காலை 11.10: அப்துல் கலாம் நினைவிடத்திற்கு கமல் செல்கிறார்
காலை 11.20: அப்துல் கலாம் நினைவிடத்திலிருந்து மதுரைக்கு புறப்படுகிறார் கமல்ஹாசன்
நண்பகல் 12.30: ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயிலில் கமல்ஹாசன் பொதுக்கூட்டம்
பிற்பகல் 2.30: பரமக்குடி ஐந்து முனை சாலையில் லேனா மஹாலுக்கு முன் அமைந்துள்ள இடத்தில் பொதுக்கூட்டம்
பிற்பகல் 3: மானாமதுரை ஸ்ரீப்ரியா தியேட்டருக்கு அருகே பொதுக்கூட்டம்
மாலை 5: மதுரை செல்கிறார் கமல்ஹாசன் (ஒத்தக்கடை மைதானம்)
மாலை 6 மணி: அரசியல் கொடி ஏற்றுகிறார்
மாலை 6.30: பொதுக்கூட்டம்
இரவு 8.10 முதல் 9 மணி வரை: நம்மவர் கமல் உரையாற்றுகிறார்.