\
இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது: கமல்ஹாசன் சாடல்

இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது: கமல்ஹாசன் சாடல்

இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது: கமல்ஹாசன் சாடல்
Published on

இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் புகைப்படத்தை சிறுவன் ஒருவன் கத்தியால் கிழிக்கும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் இசை என்பவர் பதிவிட்டுள்ளார். அதை புரியாதவர்க்கு புரியும்படியாய் என்று தலைப்பிட்டு, கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட மற்றொரு ட்விட்டர் பதிவில், அய்யகோ!  ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல் என கூறியுள்ளார். தனது வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ் இனம் சகியாது என்று குறிப்பிட்டுள்ளார். இயற்கை எனை கொன்றே தீரும், அதன்முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு, கொன்றுதான் பாரும், வென்றே தீருவேன் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இரு வாரங்களுக்கு முன்பு வார இதழ் ஒன்றில், இந்து தீவிரவாதம் இல்லையென்று இனியும் சொல்ல முடியாது என கமல்ஹாசன் எழுதியிருந்தார். இதற்கு பாஜக தலைவர்கள், இந்து அமைப்புகளில் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com