\
அரசு பணம் இல்லை; சொந்த பணம்; ஹெலிகாப்டரை பயன்படுத்துவது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம்

அரசு பணம் இல்லை; சொந்த பணம்; ஹெலிகாப்டரை பயன்படுத்துவது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம்

அரசு பணம் இல்லை; சொந்த பணம்; ஹெலிகாப்டரை பயன்படுத்துவது ஏன்?: கமல்ஹாசன் விளக்கம்
Published on

தேர்தல் பரப்புரைக்கு செல்ல ஹெலிகாப்டரை பயன்படுத்துவது ஏன் என்பது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.

கோவை வடக்கு தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் தங்கவேல் மனுத்தாக்கல் செய்தார். அவருடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் சென்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், “நான் பேருந்தில் சென்றுகொண்டிருந்தவன்தான். ஹெலிஹாப்டர் எனக்கு தேவையில்லை. என்னை ஹெலிகாப்டரில்போக வைத்ததே மக்கள்தான்.

நான் அரசு பணத்தில் செல்லவில்லை. என் சொந்த பணத்தில்தான் செல்கிறேன்.அதற்காகவே பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை செய்து வருகிறேன். எனக்கு தடங்கல்கள் செய்ய ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. மாணவர்களிடம் பேசிவிடக்கூடாது என தடுக்கப்பட்டேன். குறுகிய காலத்தில் நான் சென்றடைய வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் ஹெலிகாப்டரை பயன்படுத்துகிறேன்.

என்னுடைய கட்சியில் 234 பேரில் மக்களுக்கு தெரிந்த முகம் நான் என்பதால் அனைத்து வேட்பாளர்களுடனும் செல்கிறேன்” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com