மருத்துவ படிப்புக்கு ‘SEET' தேர்வு: கமல்ஹாசன் தேர்தல் அறிக்கை வெளியீடு

மருத்துவ படிப்புக்கு ‘SEET' தேர்வு: கமல்ஹாசன் தேர்தல் அறிக்கை வெளியீடு

மருத்துவ படிப்புக்கு ‘SEET' தேர்வு: கமல்ஹாசன் தேர்தல் அறிக்கை வெளியீடு
Published on

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் மருத்துவப்படிப்புக்கு தமிழக பாடத்திட்டத்தில் இருந்து சீட்(SEET) தேர்வு நடத்தப்படும் என கமல்ஹாசன் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

1. மக்கள் நலன் காக்கும் மக்களாட்சி
2. தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை அடுத்த 10 ஆண்டுகளில் 15-20% வளர்ச்சியை உறுதி செய்து 60-70 லட்சம் கோடியாக உயர்த்துவோம்.
3. வேலைவாய்ப்பை உறுதி செய்து தனி நபர் வருமானத்தை 7-10 லட்சமாக உயர்த்தப்படும்.
4. அனைவருக்கு சுத்தமான குடிநீர் - நீலப்புரட்சி
5. இயற்கையும் அறிவியலும் சார்ந்த நிரந்தர பசுமைப்புரட்சி, விவசாய பொருட்கள் விலை நிர்ணய உரிமை, உற்பத்தி முதல் - ஏற்றுமதி வரை உலக சந்தைமயமாக்கல்,
6. மீனவர்களுக்கு வாழ்வாதார மேம்பாடு உறுதி
7. அப்துல்கலாம் புரா திட்டம்
8. மாணவர்கள் படிப்பு சுமை குறைப்பு, அரசுப்பள்ளிக்கல்வி உலகத்தரத்தில் மேம்பாடு
9. உலகத்தரம் வாய்ந்த தனித்திறன் மேம்பாடு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேலைவாய்ப்பு
10. தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு பாடத்திட்டத்தில் எம்.பி.பிஎஸ் படிப்பிற்கு சீட்(SEET), உயர்கல்வியில் சமூக நீதி நிலைநாட்டப்படும்.
11. அனைத்து தொழிலாளர்கள் நலவாரியங்கள், நல மேம்பாட்டு வாரியங்களாக மாற்றியமைத்து அவர்களுக்கு சமூக, பொருளாதார,அரசியல் மேம்பாடு உறுதி செய்யப்படும்.
12. சுற்றுச்சூழலுக்கு ஏற்ப தொழில்துறை மேம்பாடு.
13. தமிழ் மொழி, கல்வி மொழி, ஆட்சி மொழி, ஆராய்ச்சி மொழி, ஒருவருடத்தில் ஆங்கில புலமை, மற்ற மொழி பயில, தேர்வு எழுத வசதி வாய்ப்பு.
14. ஜாதி மத பேதமில்லா மக்களாட்சி அமைப்போம்.
15. மாநில சுயாட்சியை வென்றெடுத்தல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com