சோகத்தில் பங்கேற்க தூத்துக்குடி செல்கிறேன் - கமல்ஹாசன்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி இன்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால், காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 10 உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “ஸ்டெர்ட்லைட் ஆலைக்கு எதிராக நீதிக் கேட்டு மக்கள் அமைதியாகப் போராடிய பொழுதெல்லாம் அலட்சியப்படுத்தியது அரசுகள். அரசின் அலட்சியமே அனைத்து தவறுகளுக்கும் காரணம். இதில் குடிமக்கள் குற்றவாளிகள் இல்லை".
இந்நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் "தம் மண்ணில் சென்ற வாரம் எனக்கு உற்சாக வரவேற்பளித்து அன்பைப் பொழிந்த தூத்துக்குடி சகோதர, சகோதரிகளின் சோகத்தில் பங்கேற்க தூத்துக்குடி சென்று கொண்டிருக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.