ட்விட்டரில் அரசியல் விமர்சனம் என்று ஆரம்பித்த கமல் தற்போது கட்சி ஆரம்பிப்பது வரை வந்து விட்டார்.
தமிழக அரசு மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகளை முதலில் கமல்ஹாசன் ட்விட்டரில் விமர்சித்தார். நெல்லை குடும்பம் தீக்குளித்தது குறித்து ஆறுதலும் நிதி உதவியும் போதாது என்றார். கொசஸ்தலை ஆற்றுப் பிரச்னையில் ட்விட்டரில் இருந்து நேரடியாகக் களத்தில் இறங்கினார். விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தனது பிறந்த நாளில் கேக் வெட்டாதீர்கள் குளங்களை வெட்டுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். அதோடு கேளம்பாக்கத்தில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பில் கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவது உறுதி என்றார்.