டிரெண்டிங்
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்: கமல்ஹாசன்
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்: கமல்ஹாசன்
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான், கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசு தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். இதில் அதிகப்படியாக விமர்சனங்களே இருந்து வருகிறது. குறிப்பாக கமலின் அரசியல் பிரவேச அறிவிப்பு பிறகு அவரது அனைத்து ட்விட்டர் கருத்துக்களும் கவனிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்” என்று குறிப்பிட்டுள்ளார்.