\
ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி

ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி

ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி
Published on

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்தார். 

நடிகர் கமல்ஹாசன் நேற்று தனது 63-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா துறையைச் சேர்ந்த பிரபலங்கள் என பல்வேறு தரப்பினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஸ்டாலினும் தனது ட்விட்டர் பக்கதில் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். ஸ்டாலின் தமது வாழ்த்துச் செய்தியில், “அன்பிற்கினிய நண்பர் 'கலைஞானி' அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ விழைகிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். கமல் தனது ட்விட்டரில், “தொலைபேசியில் வழக்கம் போல பேசி வாழ்த்தினீர்கள். டிவிட்டரிலும் கூட.  அன்பிற்கு நன்றி” என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com