”பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் - கமல் அறிவுரை”

”பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் - கமல் அறிவுரை”
”பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் - கமல் அறிவுரை”

இந்தாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் எனவும் ஆதரவற்றோர் இல்லங்கள் ,
முதியோருக்கு உதவி, இரத்ததானம் போன்றவைகளை செய்ய வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம்
கட்சியினருக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார். 

நவம்பர் 7 ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாள் வருகிறது. கடந்த
ஆண்டு வடகிழக்கு பருவமழையால் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் கடந்த ஆண்டு தனது
பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வேண்டாம் என கமல்ஹாசன் கேட்டுக் கொண்டார். மேலும் வடகிழக்கு
பருவ மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். 

இந்நிலையில், இந்த ஆண்டும் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என கட்சியினருக்கு
அறிவுறுத்தியுள்ளார். கேக் வெட்டுவது போன்ற ஆடம்பரங்களை தவிர்க்க வேண்டும் எனவும் அநாதை
ஆசிரமங்கள், முதியோருக்கு உதவி, இரத்ததானம் போன்றவைகளை செய்ய வேண்டும் எனவும் கட்சியினரை
கேட்டுக்கொண்டுள்ளார்.  

மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் தெருவுக்கு ஒரு மரமாவது நட்டு அதை பராமரிக்க வேண்டும் எனவும்
கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com