”சினிமாவில் கமல் எனக்கு சீனியர்; ஆனால் அரசியலில் என்னை காப்பியடிக்கிறார்” - மன்சூர்அலிகான்

”சினிமாவில் கமல் எனக்கு சீனியர்; ஆனால் அரசியலில் என்னை காப்பியடிக்கிறார்” - மன்சூர்அலிகான்

”சினிமாவில் கமல் எனக்கு சீனியர்; ஆனால் அரசியலில் என்னை காப்பியடிக்கிறார்” - மன்சூர்அலிகான்
Published on

திரைத்துறையில் கமல்ஹாசன் எனக்கு சீனியர் என்றாலும் அரசியலில் அவர் என்னை காப்பி அடிக்கிறார் என கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்தார்.

தொண்டாமுத்தூரில் வேட்புமனு தாக்கல் செய்ததை பெருமையாக நினைக்கிறேன். பண முதலைகள், ஊழல் பெருச்சாளிகள் போட்டியிடும் தொகுதியாக உள்ள தொண்டாமுத்தூர் மக்களின் பண்பு மிகவும் பிடித்துள்ளது. விவசாயம் அதிகம் உள்ளதால் இந்த தொகுதியில் போட்டியிடுவதாக கூறினார்.

கோவை தெற்கில் கமல்ஹாசன் போட்டியிடுவதால் அங்கே போட்டியிடவில்லை. தொகுதி மக்களின் அனைத்து கோரிக்கையையும் நிறைவேற்றுவதே என் வாக்குறுதி. நான் இஸ்லாமியன் என்று பிரித்து பார்க்கவில்லை, பண முதலைகளை கடந்து மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள். நான் இங்கே மக்களிடம் வேலை கேட்டு வந்துள்ளேன்’ எனக் கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com