\
முதல் பெண் போர் விமானிக்கு கமல்ஹாசன் வாழ்த்து

முதல் பெண் போர் விமானிக்கு கமல்ஹாசன் வாழ்த்து

முதல் பெண் போர் விமானிக்கு கமல்ஹாசன் வாழ்த்து
Published on: 

இந்தியாவின் முதல் போர் விமான பெண் பைலட் அவானி சதுர்வேதிக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படையில் பணியாற்றும் பெண்களுக்கு போர் விமானங்களை இயக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த முறையில், பெண் பைலட்டான அவானி சதுர்வேதி மிக்-21 ரக போர் விமானத்தை திறம்பட இயக்கினார். இதன்மூலம் இந்திய வரலாற்றில் போர் விமானத்தை இயக்கி இந்தியாவின் முதல் பெண் பைலட் என்ற பெருமையை அவர் அடைந்துள்ளார்.

இதுதொடர்பாக டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், “சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளில் முதல் முறையாக பெண் பைலட் அவானி சதுர்வேதி தனியாக போர் விமானத்தை இயக்கியுள்ளார். பிரமாதம்! பல பெண்களுக்கு இவர் தொடக்கமாக இருப்பார்” என்று கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com