கட்சி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் கமல்

கட்சி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் கமல்

கட்சி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் கமல்
Published on

கட்சியின் பெயரை அறிவித்த கமல்ஹாசன், ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கைக்கான இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்று வரும் தனது அரசியல் பிரகடன பொதுக் கூட்டத்தில் கட்சியின் பெயரை கமல்ஹாசன் அறிவித்தார். ‘மக்கள் நீதி மய்யம்’ என்பது கட்சியின் பெயர். இணைந்த கைகள் கொண்ட சின்னம் பொறித்த கட்சி கொடியை கமல்ஹாசன் ஏற்றினார். 

கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகம் செய்த நொடிகளில் அடுத்தடுத்த அறிவிப்புகளை கமல் செய்தார். முதற்கட்டமான மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கைக்கான இணையதளத்தை தொடங்கி வைத்தார். அதேபோல், மக்கள் நீதி மய்யம் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் பேஸ் புக் பக்கத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.

மக்கள் நீதி மய்யத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை, கமல்ஹாசன் வரவேற்கும் புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com