\
கமல்ஹாசன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேசப்போவது இதைத்தான்!

கமல்ஹாசன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேசப்போவது இதைத்தான்!

கமல்ஹாசன் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பேசப்போவது இதைத்தான்!
Published on: 

அரசியல் களத்தில் இறங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் பிரபல வார இதழ் ஒன்றில் ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற தலைப்பில் தொடர் ஒன்றை எழுதி வருகிறார். இந்த வாரம் அவர் எழுதியுள்ளதில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தான் பேசப்போவது பற்றியும் பகிர்ந்துள்ளார். அதில், “திரை கடலோடி திரவியம் தேடுவதும், நாடு விட்டு நாடு போய் வியாபாரம் தொடங்குவதும் தமிழர்களுக்கும் புதிதல்ல. ஆனால், அவர்கள் அங்கிருந்து பணத்தை கொண்டுவருவதைவிட முக்கியமானது, தங்களுடைய அறிவை இங்கு கொடுக்க வேண்டும். அதைப்பற்றி தான் நான் ஹார்வேர்டில் பேசப்போகிறேன். அங்கு அறிவுப்பிச்சை கேட்கத்தான் போகிறேன். அவர்களின் அந்த அறிவுப்பங்களிப்பு, நம்மை இன்னும் பலமுள்ளவர்களாக மாற்றும். ஐடியாவை வைத்துதானே சினிமா உட்பட அனைத்திலும் காசு பண்ணிக்கொண்டிருக்கிறோம். அப்படி அவர்கள் நல்ல ஐடியாக்களுடன் வரும்பட்சத்தில் காசு பணமெல்லாம் கண்டிப்பாக பின்னால் தானாகவே வந்து சேரும்.

‘இப்படி ஒரு வாய்ப்பு இருக்கிறது’ என்று அவர்களுக்கு ஞாபகப்படுத்தினால் போதும், பாய்ந்து அதை ஏற்றுக்கொண்டு நம் மாநிலத்துக்கு தோள்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு முழுதாக இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com