டிரெண்டிங்
ஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்
ஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்
தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை லோக் ஆயுக்தா அமைக்கத் தவறிய ஆளுவோருக்கு இது அவமானம் என்றும், நமக்கு இது வெகுமானம் எனவும் கூறியுள்ளார். ஊழல் என்னும் பிணியைக் கட்டுப்படுத்தும் மருந்துகளில் ஒன்று லோக் ஆயுக்தா என்று குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், தாமதிக்காமல், மேல்முறையீடு செய்யாமல் லோக் ஆயுக்தாவை அமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஊழலில் ஊறித் திளைத்தவர்களே, ஊழலுக்கு எதிரான லோக் ஆயுக்தா அமைப்ப உருவாக்க நேர்ந்தது நீதியின் விளையாட்டு என்று கூறியுள்ள கமல்ஹாசன், இவர்களது செயல்களை உச்சநீதிமன்றமும் மக்களும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.