நிம்மதியா இருக்கீங்களா..? இந்த வீடியோவை பார்க்காதீங்க.. கமல்ஹாசன்
சமீபத்தில் அரசியல் கட்சியை துவங்கிய கமல்ஹாசன் புது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மதுரை ஒத்தக்கடை பொதுக்கூட்ட மைதானத்தில் கடந்த 21ம் தேதி தனது கட்சியின் கொடியை ஏற்றி வைத்த கமல்ஹாசன், கட்சியின் பெயரையும் அறிமுகம் செய்தார். ‘மக்கள் நீதி மய்யம்’ என்பது தான் கட்சியின் பெயர். இதனையடுத்து கமல் கட்சியின் உயர்மட்டக் குழு பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கமல்ஹாசன் புதுவீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, “வணக்கம். நீங்கள் தமிழ்நாட்டில் சந்தோஷமாக, நிம்மதியாக இருக்கிறீர்கள் என்றால், இந்த வீடியோவை பார்க்க வேண்டிய அவசியமில்லை. நாட்டு நடப்பும், அரசியலும் நல்லபடியாக சென்றுக் கொண்டிருப்பதாக நீங்கள் நம்பினால் இந்த வீடியோ உங்களுக்காக எடுக்கப்பட்டது அல்ல. புறப்படுங்க... சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் பேச்சைத் தொடரும் கமல், வாவ். இன்னும் நீங்க இங்கத்தான் இருக்கீங்களா.. அப்ப நீங்க நம்ம கட்சி. அங்க என்ன செய்றீங்க. களத்திற்கு வாங்க. ” எனத் தெரிவித்துள்ளார்.