\
சமூக வலைத்தளங்களில் பரவும் கமல்ஹாசனின் ‘நாளை நமதே’!

சமூக வலைத்தளங்களில் பரவும் கமல்ஹாசனின் ‘நாளை நமதே’!

சமூக வலைத்தளங்களில் பரவும் கமல்ஹாசனின் ‘நாளை நமதே’!
Published on: 

நடிகர் கமல்ஹாசனின் நாளை நமதே ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் தமது ட்விட்டரில் பக்கத்தில், ‌நாளை நமதே எனும் தலைப்பில் ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நேற்றையும் இன்றையும் ஆய்ந்து அறிந்தால் நாளை நமதே என தெரிவித்துள்ளார். அத்துடன் “பார்த்ததை, பயின்றதை பழகி நடந்தால் நாளை நமதே. நிலமும்‌ நீரும் பொதுவென புரிந்தால் நாளை நமதே. கிராமியம் நமது தேசியம் என்றால் நாளை நமதே. தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால் நாளை நமதே. அனைவரும் கூடி தேரை இழுத்தால் நாளை நமதே” என்று கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற‌ பல்வேறு உத்வேகமூட்டும் வரிகளை தமது குரலில் நடிகர் கமல்ஹாசன் பதிவு செய்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com