கமல்ஹாசன் முதுகெலும்பற்றவர்: எச்.ராஜா கடும் விமர்சனம்

கமல்ஹாசன் முதுகெலும்பற்றவர்: எச்.ராஜா கடும் விமர்சனம்

கமல்ஹாசன் முதுகெலும்பற்றவர்: எச்.ராஜா கடும் விமர்சனம்
Published on

நடிகர் கமல்ஹாசன் முதுகெலும்பில்லாதவர் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது போன்ற தோற்றத்தை உருவாக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். 
இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, ’ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், கட்சி தொடங்கலாம் என்றபோதிலும் முதல்வராவதற்கு தகுதி வேண்டும். ஆனால், கமல்ஹாசன் முதுகெலும்பற்றவர் என கடுமையாக விமர்சித்துள்ளார். 
அதேபோல் அதிமுக  அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து கூறுகையில், ஜனநாயகத்தில் கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால், நடிகர் கமல்ஹாசன்  ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பேசாமல் இருந்துவிட்டு இப்போது பேசுவது ஏன்?’என கேள்வி எழுப்பி உள்ளார். ’கமலின் டிவிட்டர் பதிவு, அரசியலில் இறங்குவதற்கான ‌அறிவிப்பாக புரிந்துகொள்கிறேன். அதற்கு வாழ்த்துக்கள்’என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com