மாலை மரியாதை, வீரவாள் வேண்டாம்: கமல்

மாலை மரியாதை, வீரவாள் வேண்டாம்: கமல்
மாலை மரியாதை, வீரவாள் வேண்டாம்: கமல்
Published on

மாலை போட வேண்டாம், வீரவாள் தர வேண்டாம் என கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கு உதரவு போட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன்‘நாளை நமதே’என்கிற அரசியல் பயணத்தை ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து துவக்கி உள்ளார். மீனவர்கள் சந்திப்பு, அப்துல் கலாம் நினைவிடத்தில் மரியாதை, ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை ஆகிய இடங்களிலும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் கமல்ஹாசன் இறுதியாக மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து தனது கட்சியின் அரசியல் கொள்கைகளை பிரகடனம் செய்து பேசுகிறார்.

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த கமல்ஹாசனுக்கு ரசிகர்கள் அரசியல் கட்சிகளின் வழக்கமான நடைமுறையான மாவட்ட எல்லையில் வரவேற்பு, மாலை மரியாதை, பட்டாசு வெடித்தல், கட் - அவுட்கள், அலங்கார வளைவுகள் போன்ற எந்த ஏற்பாடுகளும் இருக்க கூடாது என கமல்ஹாசன் ரசிகர் மன்ற பொறுப்பாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர். நிர்வாகிகள் சிலர் மேடையில் மட்டும் வீரவாள், கீரிடத்துடன் கூடிய மாலை மரியாதை செய்ய அனுமதி கேட்டு உள்ளனர். ஆனால் அதற்கும் தடை போட்டு விட்டார் நடிகர் கமல்ஹாசன்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com