\
நெடுவாசல் மக்களை சந்திக்கிறார் கமல்

நெடுவாசல் மக்களை சந்திக்கிறார் கமல்

நெடுவாசல் மக்களை சந்திக்கிறார் கமல்
Published on

திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன் நெடுவாசல் மக்களை சந்திக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன், ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். பிப்ரவரி 21ம் தேதி மதுரையில் நடைபெற்ற விழாவில் தனது கட்சியின் பெயரை அறிவித்த அவர், கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார். மதுரையில் நடந்ததுபோல் அடுத்தக் கூட்டம் ஏப்ரல் 4-ந் தேதி திருச்சியிலும் நடத்தப்படும் என்று கமல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அடுத்தக்கட்ட அரசியல் செயல்பாடு குறித்து, தனது கட்சியினர் உடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், ஏப்ரல்.4ஆம் தேதி திருச்சி பொதுக்கூட்டத்திற்கு முன் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சித் தலைவர் கமல்ஹாசன் நெடுவாசல் மக்களை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் நெடுவாசல் மக்களிடம் அவர்களது பிரச்னைகளை கேட்டறியவுள்ளதாக கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com