"சாராயக் கடையை நடத்த தெரிந்த அரசுக்கு..." - கமல்ஹாசன் சிறப்புப் பேட்டி

"சாராயக் கடையை நடத்த தெரிந்த அரசுக்கு..." - கமல்ஹாசன் சிறப்புப் பேட்டி
"சாராயக் கடையை நடத்த தெரிந்த அரசுக்கு..." - கமல்ஹாசன் சிறப்புப் பேட்டி

”மாறணும், மாறும் என்றும் நம்புகிறோம்” என்று அழுத்தமாகச் சொல்லும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 'புதிய தலைமுறை'-க்கு அளித்த சிறப்பு நேர்காணல்...

அதிமுக, திமுக கட்சிகளை தாண்டி உங்கள் கனவுகளை சாத்தியப்படுத்த முடியும் என நினைக்கிறீகளா?

"மன்னர் ஆட்சியை எதிர்த்து சுதந்திரப் போராட்டம் நடத்தி வெல்ல முடியுமென்றால், இதையும் செய்ய முடியும். அதனை விட கொடுமையான கொடுங்கோலர்களாக நாம்தான் இவர்களை மாற்றியிருக்கிறோம்."

நாடாளுமன்ற தேர்தல் வரைக்கும் கூட அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளைத் தாண்டி மக்கள் பிற கட்சிகளுக்கு பெரிதளவில் அங்கீகாரம் கொடுக்கவில்லை. கருத்துக்கணிப்பு முடிவகளும் திமுகவிற்கு சாதகமாக இருக்கிறதே? - அப்படி இருக்கும்போது இந்தத் தேர்தலில் அது மாறும் என்று நினைக்கிறீர்களா?

"மாறணும், மாறும் என்றும் நம்புகிறோம். அப்படி இல்லையெனில் அதற்கான ஆரம்பமாவது நிகழும். கருத்துக்கணிப்புகள் அவ்வாறே இருக்கட்டும். அதற்காக எங்கள் அரசியல் பயணத்தை நாங்கள் நிறுத்த முடியாது."

இலவசங்கள் குறித்த உங்களது பார்வை?

"இலவசங்கள் ஒரு பிரச்னைக்கு தீர்வாகாது. குடிக்கவே தண்ணீர் இல்லை. அப்படி இருக்கும்போது தண்ணீர் செலவு அதிகம் ஏற்படும் வாஷிங் மெஷினை கொடுக்கிறோம் என்பது அசட்டுத்தனமாக இல்லையா? இவர்கள் கொடுக்கும் இலவசங்கள் அவர்கள் செளகரிப்படும் நேரங்களில் கொடுக்கப்படுகிறது. மக்களின் தேவையறிந்து கொடுக்கப்படுவதில்லை.

"சாராயக் கடையை நடத்த தெரிந்த அரசுக்கு, ஏன் கல்வியை தரமாக வழங்கத் தெரியவில்லை?" என்று கேள்வி எழுப்பும் கமல்ஹாசனின் சிறப்புப் பேட்டி முழுமையாக - வீடியோ வடிவில்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com