ஜிஎஸ்டி-யால் பல துறைகள் பாதிப்பு: கமல்

ஜிஎஸ்டி-யால் பல துறைகள் பாதிப்பு: கமல்

ஜிஎஸ்டி-யால் பல துறைகள் பாதிப்பு: கமல்
Published on

ஜிஎஸ்டி-யால் விசைத்தறி ‌உள்பட பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சி மற்றும் சுற்றுபயணத்திற்காக கமல்ஹாசன் ஈரோடு மாவட்டத்திற்கு சென்றார். செல்லும் வழியில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கூடியிருந்த ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, தனது திறந்தகாரில் நின்றபடி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். 

இதனையடுத்து பெருமாநல்லூரில் உள்ள விவசாயிகள் நினைவு ஸ்தூபியில் மலர்வலையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு அருகே பார்வையற்றோர் பள்ளியை கமல்ஹாசன் திறந்துவைத்தார். தொடர்ந்த சோழார் என்ற இடத்தில் விசைத்தறி உரிமையாளர்களுடன் கமல்ஹாசன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், இந்த சந்திப்பு தனது கடனையை உணர்த்துவதாக தெரிவித்தார்.

மேலும் கமல் பேசுகையில், “ஜி.எஸ்.டி., வரி விதிப்பால் அனைத்து துறைகளும் பாதித்துள்ளன. விசைத்தறி தொழிலில் உள்ள குறைகளை கேட்டபோது, என் மனம் இளகி விட்டது. எதுவும் நடக்கும் என சொல்லமாட்டேன். நாளை நடக்கப்போவதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும். அப்போது உங்களது குறைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாக உள்ளன. அதை நான் மட்டும் செய்தால் போதாது. நீங்களும் செய்யவேண்டும். இதுவரை எப்படி முடிவெடுத்தீர்கள் எனத் தெரியாது. இனிமேல் சரியான முடிவை எடுக்கவேண்டும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com