\
ஹெச்.ராஜாவுக்கு எதிராக பேசி ஆற்றலை வீணடிக்காதீர்: கமல் அறிவுரை

ஹெச்.ராஜாவுக்கு எதிராக பேசி ஆற்றலை வீணடிக்காதீர்: கமல் அறிவுரை

ஹெச்.ராஜாவுக்கு எதிராக பேசி ஆற்றலை வீணடிக்காதீர்: கமல் அறிவுரை
Published on

ஹெச்.ராஜாவுக்கு எதிராக பேசி வரும் தலைவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவுரை கூறியுள்ளார்.

திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது குறித்து ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில், “லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு ? கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு? லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில்..இன்று திரிபுராவில் லெனின் சிலை..நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வெ.ராமசாமி சிலை” என்ற கருத்தினை பதிவிட்டிருந்தார். பின்னர் அதனை நீக்கிவிட்டார். 

தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று கூறிய பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் கருத்துக்கு பல தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், “அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம். எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம்.வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு” என்று கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com