\
பல் மருத்துவமனையில் கருணாநிதிக்கு சிகிச்சை

பல் மருத்துவமனையில் கருணாநிதிக்கு சிகிச்சை

பல் மருத்துவமனையில் கருணாநிதிக்கு சிகிச்சை
Published on: 

பல் வலி காரணமாக திமுக தலைவர் கருணாநிதிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கருணாநிதி அவ்வவ்போது சிகிச்சை பெற்று வருகிறார். ஒவ்வாமை காரணமாக சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் வீடு திரும்பி ஓய்வு பெற்று வருகிறார். தொடர்ச்சியாக ஒரு ஆண்டிற்கு மேல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வு பெற்று வருகிறார். இதற்கிடையில், அண்ணா அறிவாலயத்திற்கு சென்ற அவர், தைப் பொங்கல் உள்ளிட்ட சில நாட்களில் தொண்டர்களையும் பார்த்தார். 

இந்நிலையில், தேனாம்பேட்டையில் உள்ள அதே தனியார் மருத்துவமனைக்கு இன்று சென்றுள்ளார். பல் வலி காரணமாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதாவது பல் கிளீனிங் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சிகிச்சை முடிந்து உடனடியாக வீடு திரும்பினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com