\
குறை கூறாமல் ஆலோசனை கூறுங்கள்: கடம்பூர் ராஜூ

குறை கூறாமல் ஆலோசனை கூறுங்கள்: கடம்பூர் ராஜூ

குறை கூறாமல் ஆலோசனை கூறுங்கள்: கடம்பூர் ராஜூ
Published on

இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது குறை சொல்லாமல், ஆலோசனை கூறுங்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தூத்துக்குடி ‌மாவட்டம் கோவில்பட்டியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், தபால் நிலையத்தில் கணக்கு வைத்திருப்பவர்களின் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை இணக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. 
இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு பணியைத் தொடக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், தொற்றுநோய் பரவுவது குறித்தும், இயற்கை இடர்பாடுகளை சரிசெய்யவும் எதிர்க்கட்சித் தலைவர் தொண்டர்களுக்கு ஆலோசனை கூறாமல், வேடிக்கை பார்க்கச் செல்கிறார் என்று கூறினார். மேலும், நடிகர் கமல்ஹாசன் மக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறாமல் மதவாதத்தினை தூண்டுகிறார் என்று குற்றம்சாட்டினார். அத்துடன் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் போது அரசை குறை கூறாமல், அவற்றை சரிசெய்ய ஆலோசனை கூறுங்கள் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com