கல்விக்கொள்கை பற்றி சூர்யாவுக்கு என்ன தெரியும்? - அமைச்சர் கடம்பூர் ராஜூ காட்டம்

கல்விக்கொள்கை பற்றி சூர்யாவுக்கு என்ன தெரியும்? - அமைச்சர் கடம்பூர் ராஜூ காட்டம்

கல்விக்கொள்கை பற்றி சூர்யாவுக்கு என்ன தெரியும்? - அமைச்சர் கடம்பூர் ராஜூ காட்டம்
Published on

கல்விக்கொள்கை பற்றி நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, “ மூன்று வயதிலேயே மூன்று மொழிக் கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்..?. எல்லோரும் அமைதியாக இருந்தால், இது திணிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை மீதான ஆலோசனைகளை, மாற்றங்களை ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊடகங்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், என அனைவருமே ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள்” என கூறியிருந்தார்.

சூர்யாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. சூர்யாவின் இந்த பேச்சு குறித்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் கடுமையாக சாடியிருந்தனர். 

இந்நிலையில், கல்விக்கொள்கை பற்றி சூர்யாவுக்கு என்ன தெரியும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நடிகர் சூர்யா அரைவேக்காட்டுத்தனமாக பேசுவதாகவும் நன்கு தெரிந்து கொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம். தெரியாமல் பேசுபவர்களுக்கு எப்படி பதில் கூற முடியும்? எனவும் கடம்பூர் ராஜூ காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com