கேரள கோயில் கருவறைக்குள் இருந்த தீண்டாமை ஒழிந்தது: கி. வீரமணி பெருமிதம்

கேரள கோயில் கருவறைக்குள் இருந்த தீண்டாமை ஒழிந்தது: கி. வீரமணி பெருமிதம்
கேரள கோயில் கருவறைக்குள் இருந்த தீண்டாமை ஒழிந்தது: கி. வீரமணி பெருமிதம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். 

கேரளா மாநில அறநிலையத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி பெற்ற அமைப்பான திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கீழ் 1248 கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்களில் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் மூலம் 6 தலித்கள் உட்பட 36 பிராமணர் அல்லாதவர்கள் அர்ச்சகர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கேரளாவைப்போல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை தமிழக அரசும் பின்பற்றி ஆணை பிறப்பிக்க வேண்டும் என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். கேரளாவில் 90 ஆண்டுகளுக்கு முன் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தை தந்தை பெரியார் நடத்திய நிலையில், தற்போது கோயில் கருவறைக்குள் இருந்த தீண்டாமை ஒழிந்திருப்பது பெரியாரின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com