மோடி கூறியது மாற்றம் அல்ல ஏமாற்றம்: கி.வீரமணி

மோடி கூறியது மாற்றம் அல்ல ஏமாற்றம்: கி.வீரமணி

மோடி கூறியது மாற்றம் அல்ல ஏமாற்றம்: கி.வீரமணி
Published on

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மாற்றங்கள் ஏற்படும் என பிரதமர் மோடி கூறிய அனைத்தும் ஏமாற்றத்தையே அளித்துள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பணமதிப்பிழப்பை அறிவித்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனை பாஜகவினர் கறுப்புப் பண ஒழிப்பு தினமாகவும், எதிர்க்கட்சியினர் கறுப்பு தினமாகவும் கொண்டாடி வருகின்றனர். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் நவம்பர் 8 ஆம் தேதி மறக்க முடியாத கருப்பு நாளாக மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார். அத்துடன் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மாற்றங்கள் ஏற்படும் என பிரதமர் மோடி கூறிய அனைத்தும் ஏமாற்றத்தையே அளித்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிட்டதாகவும் கி.வீரமணி சாடியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com