\
அவதூறு பரப்புவதா? முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

அவதூறு பரப்புவதா? முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

அவதூறு பரப்புவதா? முதல்வருக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்
Published on

மேகதாதுவில் அணை கட்டப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசியதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதை வன்மை யாகக் கண்டிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் பதவியேற்றதும் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று ராகுல் காந்தி பேசியிருப்பதாக, அவர் பேசாததை பேசியதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு என்ன ஆதாரம், என்ன அடிப்படை என்பதை அவர் வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

காவிரியில் மேகதாதுவின் குறுக்கே அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான அனுமதியை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கட்டுபாட்டில் இருக்கும் மத்திய நீர்வள ஆணையம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதை தடுத்து நிறுத்த கையாலாகாத நிலையில் அதிமுக அரசு இருப்பதையே இது காட்டுகிறது. முதல்வரின் பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com