\
எம்.எல்.ஏக்களை நீக்காமல் டெங்குவை நீக்குங்கள்: கே.ஆர்.ராமசாமி

எம்.எல்.ஏக்களை நீக்காமல் டெங்குவை நீக்குங்கள்: கே.ஆர்.ராமசாமி

எம்.எல்.ஏக்களை நீக்காமல் டெங்குவை நீக்குங்கள்: கே.ஆர்.ராமசாமி
Published on

தமிழக அரசு சில எம்.எல்.ஏக்களை நீக்கம் செய்ய செலுத்தும் கவனத்தை, டெங்கு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளில் செலுத்தவில்லை என காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் கே.ஆர்.ராமசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்போது உள்ள அரசு ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள மத்திய அரசிற்கு பணிந்து விட்டாதாக கூறினார். சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்பதே தங்களின் பிரதான கோரிக்கை என்றும், அரசுக்கு எதிராக செயல்படும் எம்.எல்.ஏக்களை தகுதி நீ‌க்கம் செய்யும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருவதாகவும் அவர் சாடினார். 
அத்துடன் கடந்த சில நாட்களாக செயல்படாமல் இருந்த தலைமை செயலகம் தற்போது எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய மட்டும் விறுவிறுப்பாக செயல்படுவதாகவும், இந்த வேகத்தை டெங்கு உள்ளிட்ட மக்கள் பிரச்சனைகளில் ஏன் அரசு செலுத்தவில்லை என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் சட்டமன்ற கொறடா விஜயதாரனி உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் உடனிருந்தனர்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com