முதல்வர் வேட்பாளர் யார்?: ராஜேந்திர பாலாஜி கருத்துக்கு கே.பி.முனுசாமி பதில்

முதல்வர் வேட்பாளர் யார்?: ராஜேந்திர பாலாஜி கருத்துக்கு கே.பி.முனுசாமி பதில்
முதல்வர் வேட்பாளர் யார்?: ராஜேந்திர பாலாஜி கருத்துக்கு கே.பி.முனுசாமி பதில்

2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்றும், முதல்வர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் கட்சித் தலைமை முடிவு செய்யும் எனவும் முன்னாள் அமைச்சரும், கட்சியின் துணை ஒருங்கிணைப்‌பாளருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதியதலைமுறைக்கு பேட்டியளித்த அவர், “அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதல்வர் வேட்பாளர் குறித்து அவருடைய ஆசையை கூறி இருக்கிறார். செல்லூர் ராஜூ முதல்வர் தேர்வு விதியை கூறி இருக்கலாம். ஆனால் கட்சியின் தலைமைதான் உரிய நேரத்தில் அமர்ந்து பேசி முடிவெடுப்போம்.

இதே கருத்தைதான் தலைமை முடிவெடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறி இருக்கிறார். தமிழகத்தில் அதிமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது. நீண்டகாலமாக தமிழகத்தில் ஆட்சியில் இருக்கிறோம். முன்மாதிரியாக அதிமுக ஆட்சி செய்திருக்கிறது.

அதிமுக தலைமையில் தான் கூட்டணி இருக்கும். வி.பி துரைசாமி அவரை முன்னிலைப்படுத்த பேசுகிறார். கூட்டணி குறித்து மாநில தலைவர் முருகன் மட்டும் இல்லாமல், அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா முடிவெடுக்க வேண்டும். முதல்வர், துணை முதல்வர் தலைமையில் சிறந்த ஆட்சி நடந்து வருகிறது. தேர்தல் பணியை எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் வழிகாட்டுதலுடன் எதிர் கொள்வோம்” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com