’’பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம்’’ - ஜோதிமணி எம்.பி

’’பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம்’’ - ஜோதிமணி எம்.பி
’’பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம்’’ - ஜோதிமணி எம்.பி

’காங்கிரஸில் வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை’ என்று அக்கட்சியின் கரூர் ஜோதிமணி எம்.பி வருத்தம் தெரிவித்துள்ளார். 

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாத நிலையில், அதற்குள் கட்சிக்குள் வேட்பாளர் தேர்வு தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராகவும், ஆதரவாகவும் இரு தரப்பினர் தனித்தனியாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேட்பாளர் தேர்வு குறித்து ஜோதிமணி எம்பி தன்னுடைய அதிருப்தியை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அவர் தமது ட்விட்டரில், “ காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக்கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.

நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம்.காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் இரத்தத்திலும்,வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை.

எனது தலைவர் @RahulGandhi பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம் பி கிடையாது. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும்,நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன்.நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com