பாய்ந்து அடித்து ரன் அவுட் செய்த தோனி! சோஷியல் மீடியாவில் கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்

பாய்ந்து அடித்து ரன் அவுட் செய்த தோனி! சோஷியல் மீடியாவில் கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்
பாய்ந்து அடித்து ரன் அவுட் செய்த தோனி! சோஷியல் மீடியாவில் கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்

பஞ்சாப் அணியின் ராஜபக்சேவை ரன் அவுட்டாக்க ஜோர்டான் வீசிய டைரக்ட் ஹிட் “மிஸ்” ஆக, பந்தை பிடித்து பாய்ந்து வீசி மின்னல் வேகத்தில் அவுட்டாக்கி அசத்தினார் தோனி.

ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து முதல் வெற்றியை பதிவு செய்யும் உத்வேகத்தில் களமிறக்கும் சென்னை அணி, இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. முதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா, பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் ஒரு பவுண்டரி மட்டும் விளாசி முகேஷ் சவுத்ரி பந்துவீச்சில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். ஜோர்டான் வீசிய 2வது ஓவரில் நிகழ்ந்த பனுகா ராஜபக்சே ரன் அவுட் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஜோர்டான் வீசிய பந்தை பனுகா ராஜபக்சே, அதை ஜோர்டானுக்கு இடது புறம் அடித்தார். பந்து பிட்சை தாண்டாத போதும் ரன் ஓட முயன்றனர் ராஜபக்சேவும் தவானும். தவானின் அழைப்பை அவர் கேட்கவில்லையா அல்லது தவான் அவரை விட்டுவிட்டாரா என்பது தெரியவில்லை. ஒரு அடி மட்டும் எடுத்துவிட்டு தவான் பின்வாங்கிக் கொண்டார். சில அடி தூரம் ராஜபக்சே ஓடி வந்துவிட, இதை தனக்கு சாதமாக்க முயன்றார் ஜோர்டான். டைரக்ட் ஹிட்டாக ஸ்டம்பை நோக்கி பந்தை வீசினார். ஆனால் அது எதிர்பாராத விதமாக மிஸ் ஆனது.

பந்து ஸ்டம்பை அடிக்கவில்லை என்பதை உணர்ந்த தோனி, இதற்காகவே தயாராக இருந்திருப்பார் போல! பந்தை பிடித்து பாய்ந்து வீசினார்! ஸ்ட்ம்பில் பட்டு விளக்குகள் ஜொலித்தன. 3வது அம்பயர் தேவையா என்ன? ராஜபக்சே கீரிஸிற்கு அப்போது வரை திரும்பவில்லை! ஒரு அட்டகாசமான ரன் அவுட்! தோனி இருக்கும்போது எப்படி மிஸ் ஆகும் என்பதை குறிக்கும் வகையில் தன் ட்ரேட்மார்க் புன்னகையை உதிர்த்தார் தோனி!

தோனிக்கு இது பத்தோடு பதினொன்று தான்! ஆனால் அவரது ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமைந்தது இந்த ரன் அவுட். தற்போது சமூக வலைதளங்களில் அந்த ரன் அவுட் ட்ரெண்ட் ஆகி வருகிறது! வீடியோவை பார்க்க: டைரக்ட் ஹிட்டை மிஸ் செய்த ஜோர்டான்! பாய்ந்து ரன் அவுட்டாக்கிய தோனி!

இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் லியம் லிவிங்ஸ்டன் 32 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். இதில் 5 சிக்ஸர், 5 பவுண்டரி அடங்கும். ஷிகர் தவான் 24 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். ஜிதேஷ் ஷர்மா 17 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். சென்னை அணியில் ஜோர்தன் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அதேபோல் ப்ரிடோரியஸும் இரண்டு விக்கெட் சாய்த்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com