\
ஆஸ்திரேலியா செல்லும் ஜோக்கர்!

ஆஸ்திரேலியா செல்லும் ஜோக்கர்!

ஆஸ்திரேலியா செல்லும் ஜோக்கர்!
Published on

ஜோக்கர் திரைப்படம் ஆஸ்திரேலியாவில் திரையிடப் பட உள்ளது.

ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் திரைப்படம் இந்தாண்டின் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை தட்டிச் சென்றது அனைவரும் அறிந்ததே. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் பிரபு தயாரித்திருந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெறும் இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்படுவதற்கு ஜோக்கர் படம் தேர்வாகியுள்ளது. 

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரான பிரபு கூறும்போது, ஜோக்கர் படத்தை சிறிய பட்ஜெட்டில் தான் நாங்கள் எடுத்தோம். அனைத்து தரப்பு மக்களிடம் இருந்து படத்திற்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. அத்தோடு இந்தாண்டிற்கான தேசிய விருதையும் வாங்கி சாதனை படைத்தது. இப்போது ஆஸ்திரேலியாவில் திரையிட படம் தேர்வாகியுள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com