நோட்டாவிடம் தோற்ற மிஸ்டுகால் கட்சி: ஜிக்னேஷின் கிண்டல் ட்வீட்

நோட்டாவிடம் தோற்ற மிஸ்டுகால் கட்சி: ஜிக்னேஷின் கிண்டல் ட்வீட்
நோட்டாவிடம் தோற்ற மிஸ்டுகால் கட்சி: ஜிக்னேஷின் கிண்டல் ட்வீட்

உலகின் மிகப்பெரிய மிஸ்டுகால் கட்சியான பாஜக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவிடம் தோல்வியடைந்துள்ளதை தலித் அதிகார் மஞ்ச் தலைவரும், குஜராத் சுயேட்சை எம்.எல்.ஏ.வுமான ஜிக்னேஷ் மேவானி விமர்சித்து ட்வீட் செய்துள்ளார்.

மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் 19 சுற்றுகளிலும் பாஜகவை விட நோட்டா தான் முன்னிலையில் இருந்தது. பாஜக 1417 வாக்குகள் கிடைத்த நிலையில் நோட்டாவுக்கு 2373 வாக்குகள் கிடைத்தன.

இந்தியா முழுவதும் நேற்று 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றாலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தான் ட்விட்டரில் டிரெண்டில் இருந்தது. குறிப்பாக #NOTAvsBJP என்ற ஹேஷ்டேக் டிரெண்டில் இருந்தது. 

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் 50 லட்சம் மிஸ்டுகால் பெற்ற உலகின் மிகப்பெரிய மிஸ்டுகால் கட்சியான பாஜக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 1417 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. இது நோட்டா பெற்ற வாக்குகளை விட குறைவானவை. தமிழ்நாட்டின் இந்த சிறப்பான ஊத்தாப்பத்தை பாஜகவினர் ஜீரணித்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com