தலித் கொடுமைகளுக்கு எதிராக நாடாளுமன்ற வீதியில் மாபெரும் பேரணி

தலித் கொடுமைகளுக்கு எதிராக நாடாளுமன்ற வீதியில் மாபெரும் பேரணி

தலித் கொடுமைகளுக்கு எதிராக நாடாளுமன்ற வீதியில் மாபெரும் பேரணி
Published on

தலித்கள் மீதான கொடுமைகளுக்கு எதிராக ஜிக்னேஷ் மேவானி தலைமையில் டெல்லி நாடாளுமன்ற வீதியில் மாபெரும் பேரணி நடைபெற்றது.

வலதுசாரிகளின் வன்முறை அதிகரித்துள்ளதை கண்டித்தும், கல்வி உரிமை, வேலைவாய்ப்பு, பாலின சமத்துவ உரிமை ஆகியவற்றை வலியுறுத்தியும்,  "சமூக நீதி பேரணி" என்ற பெயரில் டெல்லி நாடாளுமன்ற தெருவில் இந்தப் பேரணி நடைபெற்றது.

குஜராத் வட்காம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ.ஆன ஜிக்னேஷ் மேவானி, போராட்டத்தில் கலந்து கொள்ள இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்திருந்தார். இந்த அழைப்பின் பேரில் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

இந்தப் பேரணிக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக கூறப்பட்டது. தடையை மீறி அவர் பேரணி நடத்த வந்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. நிலைமை கட்டுக்கு மீறி செல்வதை தடுக்க சுமார் 2000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கண்ணீர் புகை குண்டுகள், தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

அனுமதி மறுக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்த டெல்லி தலைமை போலீஸ் அதிகாரி திபெந்தர், “பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ஜந்தர் மந்தருக்கு தான். நாடாளுமன்ற தெருக்கு அல்ல. பேரணிக்கு அனுமதி அளிப்பதில் எவ்வித பிரச்சனையும் இல்லை” என்றார்.

பேரணி தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்ற வீதிக்கு அருகில் நடைபெற்ற கூட்டத்தில் ஜே.என்.யு. மாணவர் தலைவர் கன்னையா குமார், ஷெலா ரஷித் மற்று உமர் காலித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், அசாம் விவசாயிகள் சங்க தலைவர் அகில் கோகாய், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பேரணியில் பேசிய பிரசாந்த் பூஷன், மதச்சார்பின்மையை தான் நாம் விரும்புகிறோம். ஆனால் நாட்டில் தலித்கள், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எமர்ஜென்சியின் போது நமது ஜனநாயம் அச்சுறுத்தலுக்கு ஆளானது, தற்போது நம்முடைய கலாச்சாரம் அச்சுறுத்தலுக்கு தள்ளப்பட்டுள்ளது” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com