\
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்: பிரதமர் மோடி 25-ஆம் தேதி பரப்புரை?

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்: பிரதமர் மோடி 25-ஆம் தேதி பரப்புரை?

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்: பிரதமர் மோடி 25-ஆம் தேதி பரப்புரை?
Published on

ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக வரும் 25-ஆம் தேதி பிரதமர் மோடி அங்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், முதற்கட்ட வாக்குப்பதிவு வரும் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர பரப்பரையில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில் பாஜக கட்சி சார்பில் நேற்று முதல் அங்கு பரப்புரை பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கூட்டங்களில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் மேதினிநகர் மற்றும் கும்லா பகுதிகளில் வரும் 25-ஆம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்திற்காக மாநில பாஜக சார்பில் மிகவும் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பொதுக் கூட்டங்களை முடித்த பிறகு இரண்டாவது கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள ஜம்ஷேத்பூரில், பிரதமர் மோடி சாலை பேரணி நடத்த உள்ளதாகவும் அக்கட்சி சார்பில் கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com