\
மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்: முதலமைச்சர் அறிவிப்பு

மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்: முதலமைச்சர் அறிவிப்பு

மெரினாவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்: முதலமைச்சர் அறிவிப்பு
Published on

சென்னை மெரினாவில் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இதுகுறித்த அறிவித்த முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி, "சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதி அமைந்திருக்கும் இடத்திலேயே அவருக்கு பிரமாண்டமான சிறப்பு நினைவு மண்டபம் கட்டப்படும். இதற்காக சர்வதேச அளவில் கட்டட கலை நிபுணர்களிடம் வரைபடம் கேட்கப்பட்டுள்ளது. குழு அமைத்து சிறந்த வரைபடம் தேர்வு செய்யப்பட்டு அதனடிப்படையில் நினைவு மண்டபம் கட்டப்படும்" என்று அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவு அமைக்கப்படும். சென்னையில் 6 வெளிவட்ட சாலைப் பணிகள் நடப்பாண்டில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும்.திருவொற்றியூர் மேம்பாலம் இரண்டு வாரத்தில் திறக்கப்படும் என அவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com