\
பிப்.12-ல் ஜெயலலிதா உருவப்படம் சட்டப்பேரவையில் திறப்பு

பிப்.12-ல் ஜெயலலிதா உருவப்படம் சட்டப்பேரவையில் திறப்பு

பிப்.12-ல் ஜெயலலிதா உருவப்படம் சட்டப்பேரவையில் திறப்பு
Published on: 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படம் தமிழக சட்டப்பேரவையில்‌ வரும் திங்கட்கிழமை திறக்கப்படுகிறது.

இதுதொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் பூபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 12-ம் தேதியன்று ‌காலை 9.30 மணியளவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் சபாநாயகர் தனபால், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறந்துவைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கலந்து கொள்ள வேண்டும் எனவும், அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com