ஜெயலலிதா நினைவுதினம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அமைதி ஊர்வலம்

ஜெயலலிதா நினைவுதினம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அமைதி ஊர்வலம்

ஜெயலலிதா நினைவுதினம்: ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அமைதி ஊர்வலம்
Published on

ஜெயலலிதா நினைவுதினத்தையொட்டி ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.இதனையொட்டி மாநிலத்தின் பல இடங்களிலும், அவரது திருவுருவப் படம் வைக்கப்பட்டு அதிமுக தொண்டர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி  ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையில் தொடங்கிய இந்த அமைதி ஊர்வலம் ஜெயலலிதா நினைவிடத்தில் முடிவடைந்தது. அமைதி ஊர்வலத்தில் அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கறுப்புச் சட்டையுடன் பங்கேற்றனர். அமைதி ஊர்வலம் நிறைவடைந்ததும் முதலமைச்சர் பழனிசாமி, ஓபிஎஸ், அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com