\
ஜெயலலிதா மரணம்: டிடிவி தினகரன், கிருஷ்ணப்ரியாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன்

ஜெயலலிதா மரணம்: டிடிவி தினகரன், கிருஷ்ணப்ரியாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன்

ஜெயலலிதா மரணம்: டிடிவி தினகரன், கிருஷ்ணப்ரியாவுக்கு விசாரணை ஆணையம் சம்மன்
Published on

ஜெயலலிதா மரணம் தொடர்பாக டிடிவி தினகரன், கிருஷ்ணப்ரியா ஆகியோருக்கு ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெய்ய நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம், தனது விசாரணையை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தில் பல்வேறு தரப்பினர் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் டிடிவி தினகரன், இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதுதவிர, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனுக்கும் விசாரணை ஆணையத்தின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் அனை‌வரும் 7 நாட்களுக்குள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தங்க‌ளிடம் உள்ள ஆவணங்கள்‌ மற்றும் ஆதாரங்களை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com