ஜெயலலிதாவின் பள்ளித் தோழியான பதர் சையத் காங்கிரசில் இணைந்தார்..!

ஜெயலலிதாவின் பள்ளித் தோழியான பதர் சையத் காங்கிரசில் இணைந்தார்..!
ஜெயலலிதாவின் பள்ளித் தோழியான பதர் சையத் காங்கிரசில் இணைந்தார்..!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான பதர் சையத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர் முன்னிலையில், பதர் சையத் அக்கட்சியில் சேர்ந்தார். அப்போது காங்கிரஸ் கட்சிக்கான உறுப்பினர் அட்டை வழங்கி திருநாவுக்கரசர் அவரை வரவேற்றார். இதையடுத்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளராகவும் பதர் சையத் உடனடியாக நியமிக்கப்பட்டார்.

பின்னர் பேசிய பதர் சையத், வரும் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணிதான் தமிழகத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றார். ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான பதர் சையத், அதிமுக எம்எல்ஏவாகவும், வக்பு வாரியத் தலைவராகவும் பதவி வகித்தவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com