\
‘டெல்லியில் அமித்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள்’ ‘தமிழகத்தில் முதல்வருடன் முரளிதரராவ் சந்திப்பு

‘டெல்லியில் அமித்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள்’ ‘தமிழகத்தில் முதல்வருடன் முரளிதரராவ் சந்திப்பு

‘டெல்லியில் அமித்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள்’ ‘தமிழகத்தில் முதல்வருடன் முரளிதரராவ் சந்திப்பு
Published on

சிஏஏ, என்.பி.ஆர் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியுரிமை சட்டத்தை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நீடித்து வருகின்றன. தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதைத்தொடர்ந்து சென்னை கிரீன் வேல்ஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை பாஜகவின் தமிழக மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், டெல்லியில் சிஏஏ, என்.பி.ஆர் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின்போது ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும் உடனிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com