தினகரன் ஒதுங்கி இருக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

தினகரன் ஒதுங்கி இருக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

தினகரன் ஒதுங்கி இருக்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
Published on

தினகரன் ஒதுங்கி இருக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த நிதியமைச்சர் ஜெயக்குமார், வரும் 14ம் தேதி தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்து முதலமைச்சருடன் விவாதித்ததாகத் தெரிவித்தார். கட்சிப் பணிகளை மேற்கொள்ளப் போவதாக டிடிவி தினகரன் கூறியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், சசிகலா மற்றும் தினகரனை கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக கடந்த ஏப்ரல் 17ம் தேதி எடுத்த முடிவில் எந்தவிதமான மாற்றமுமில்லை. தினகரனை சார்ந்தவர்களை நம்பி அதிமுக அரசு இல்லை. அவரை கட்சியில் உள்ள நிர்வாகிகள் யாரும் சந்திக்க மாட்டார்கள். தினகரனை சார்ந்தவர்களை முழுமையாக ஒதுக்கி நல்லாட்சி நடைபெறுகிறது என்றார். அப்போது அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், சரோஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் பெற்ற வழக்கில் ஜாமீனில் வெளிவந்த டிடிவி தினகரன், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்த நிலையில் அமைச்சர்கள் கூட்டாக இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். 
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com