\
ஜெயா டிவி இருட்டடிப்பு செய்யப்படுகிறது: விவேக் ஜெயராமன்

ஜெயா டிவி இருட்டடிப்பு செய்யப்படுகிறது: விவேக் ஜெயராமன்

ஜெயா டிவி இருட்டடிப்பு செய்யப்படுகிறது: விவேக் ஜெயராமன்
Published on

நமது எம்ஜிஆர் நாளேட்டையும், ஜெயா தொலைக்காட்சியும் மீட்போம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். 


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசு கேபிளில் ஜெயா தொலைக்காட்சி இருட்டடிப்பு செய்யப்படுகிறது.ஜெயா தொலைக்காட்சியும், நமது எம்.ஜி.ஆர் நாளேடும் தனியார் நிறுவனங்கள். யாரும் சர்வ சாதரணமாக உள்ளே புகுந்து கைவசமாக்கக் கூடிய நிலையில் இரு நிறுவனங்களும் இல்லை. இந்த விவரங்கள் தெரிந்திருந்தும், அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக ஜெயா தொலைக்காட்சியை மீட்கப் போவதாக தீர்மானம் இயற்றி இருப்பது மக்கள் அபிமானம் பெற்ற ஓர் ஊடகத்துக்கு விடப்பட்டிருக்கும் பகிரங்க மிரட்டலாகத்தான் தெரிகிறது. இருப்பினும் இந்த மிரட்டல்களை நெஞ்சிறுதியோடு எதிர்த்து நிற்போம்’ என்று கூறியுள்ளார்.


முன்னதாக அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் நாளிதழ்களை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்ற முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com