\
பாஜகவில் இணைந்தார் நடிகை ஜெயப்பிரதா!

பாஜகவில் இணைந்தார் நடிகை ஜெயப்பிரதா!

பாஜகவில் இணைந்தார் நடிகை ஜெயப்பிரதா!
Published on

நடிகை ஜெயப்பிரதா, பாரதிய ஜனதா கட்சியின் இன்று இணைந்தார். 

தமிழில், மன்மத லீலை, நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, தசாவதாரம் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ஜெயப்பிரதா. 80-களில் டாப் ஹீரோயினாக இருந்த இவர், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். ஆந்திராவில் தெலுங்கு தேசக் கட்சியில் சேர்ந்த அவர், பின்னர் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். கடந்த 2004 மற்றும் 2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

கடந்த 2010-ம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சியில் இருந்து வெளியேறி அமர் சிங்குடன் இணைந்து ராஷ்டிரிய லோக் மன்ஞ் என்ற கட்சியைத் தொடங்கினார். இந்நிலையில் அவர் பாஜகவில் இணைவதாகவும் வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் தொகுதி யில், பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என்றும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அவர் பாஜகவில் இன்று இணைந்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com